Sunday, November 13, 2005

காத்திருக்கிறேன் உனக்காக...

என்னவளே
எதற்க்கித்தனை அமைதி
எப்படி எனை நீ மறந்தாய்
எனக்கு புரியவில்லை
எப்படியும்
எனக்குரியவள் என்றே
என்னாளும் எண்ணுகின்றொன்
எண்ணத்தில் தீயிட்டு
எரித்திடதே-
எரிந்து சாம்பலானாலும்
எப்போதும் உனை மறவேன்
எப்படியோ எய்து விட்டாய் -காதல்
எனும் அம்புதனை
என் நெஞ்சினுள்..
என்ன செய்யுதும்
எடுக்க முடியாதடி
என் உள்ளத்திலிருந்து
எனக்கு அம்பு தைத்தது வலியல்ல -அதை
எய்த நீயோ எடுக்க நினைப்பது
என்னால் தாங்க முடியவில்லை
என் கண்காளுக்கு தூக்கமில்லை
என்னாளும் காவல் செய்கின்றது
என்னவளிடமிருந்து
எகிறி வந்த கதல் அம்புதனை
எப்படியும் என்னை நீ
என்றோ ஒரு நாள் புரிந்து கொள்வாய்
எனும் நம்பிக்கை தனில்..
என்றும் காத்திருக்கிறேன் உனக்காக...

0 Comments:

Post a Comment

<< Home