Sunday, November 13, 2005

ஐயமே வாழ்வாகியதால்...

ஐயமின்றி என்மனதில் காதல்
ஐம்புலனடக்கும் அநிவிருந்தும்
ஐயோ நுழைந்து விட்டேன்
ஐய்யோ இது தான் காதலா?
ஐயமின்றி காத்திருக்கிறேன்
ஐந்து கரத்தினை நம்பியிருக்கிறேன்
ஐந்தல்ல ஐயாயிரம் ஆண்டுகள்
ஐயமின்றி காத்திருப்பேன்
ஐயமிட்டு உனக்காய்
ஐந்து வேளை கடவுளை வணங்கி
ஐந்து பதிகம் பாடுகின்றேன்
ஐந்தறிவு ஜீவனுக்கும்
ஐங்கரம் தம்பிக்கும்
ஐந்து கண்ட அரசனுக்கும்
ஐயத்துடன் வாழும் எதிரிக்கும்
ஐயோ காதல் காதல்...
ஐந்து கண்டங்கள் தாண்டி
ஐந்தாறு படிப்பு படிக்க
ஐயா அனுப்பி வைக்க
ஐயோ எனக்குள் காதல்..
ஐயமோ உனக்கு சொல்ல
ஐயத்துடன் வாழ்கிறேன்
ஐயமே வாழ்வாகியதால்...

குறிப்பு: ஐயம் என்பது பல தடவை கவிதையில் இருக்கிறது. அது வசனங்களுக்கு ஏற்ப பொருள்
தரும்
ஐயமின்றி காத்திருப்பேன் -இதில் வரும் ஐயம் சந்தேகம்
ஐயமிட்டு உனக்காய் - இதில் வரும் ஐயம்- தானம் அல்லது பிச்சை
ஐயமோ உனக்கு சொல்ல -இதில வரும் ஐயம் பயம் அல்லது அச்சம்

0 Comments:

Post a Comment

<< Home