ஈவிரக்கமற்ற உன்னால்...
ஈட்டியின் கூர்மையோ காதல்
ஈற்றிலே இன்று
ஈடாடுகின்றேன் இதன் வலியால்
ஈடாடுவதையே வெறுப்பவன்
ஈரமான விழியுடன்
ஈவிரக்கமற்ற உன் நினைவால்
ஈருடலுக்குள் ஓருயிர் வைக்க
ஈரேழு ஜென்மங்கள் வாழ
ஈரவிழியுடன் தவிக்கிறேன்
ஈயாத உன் உள்ளமுடன் -இதயத்தில்
ஈட்டி எறிந்தவளே!- உனை
ஈர்க்க தெரியமால் -என்
ஈர உணர்வுகள்
ஈடாடுகின்றதடி
ஈகம் செய்ய இது ஒன்றும்
ஈ காக்க காதலல்ல
ஈருலகமெங்கும் இருக்கும்
ஈ (இ) தயக்காதல்
ஈர்க்கும் சக்தியன்றி
ஈரமான கன்னங்களுடன்
ஈழத்தமிழன் நான்
ஈவிரக்கமற்ற உன்னால்...

0 Comments:
Post a Comment
<< Home