Monday, June 19, 2006

உனக்காக விடு...!!


உன் நினைவின்றி -எனை
இருக்க விடு
நின்மதியாய் எனை
வாழ விடு

சோகமின்றி எனை
சிரிக்க விடு
காயங்கள் தந்து எனை
கொல்வதை விடு
எதிரியாய் நீ எனை
பார்ப்பதை விடு
சிரிக்குமுன் முகத்து
கோபம் விடு
சிதையாமல் கனவு
நனவாக காதல் விடு
எழுகின்ற காலையேல்லாம்
துளிர் விடு
மறைகின்ற மாலை எல்லாம்
ஒளிர் விடு
விடு விடு
எல்லாவற்றையும் விடு
எனக்காக வில்லையேனிலும்
உனக்காக விடு...

Sunday, November 13, 2005

ஒரு போதும் மறவேன் அவளை......

ஓரு பிறப்பில்
ஒரு காதல்...-அதில்
ஓரு ஆயிரம் நினைவுகள்
ஒன்றுமே பெரிதல்ல
ஒருமையில் காதல் என்றாலும்
ஒரு போதும் நான் மறவேன்
ஒற்றைக்காதல் என்காதல்
ஒருவனும் இல்லையேனக்கு
ஓன்றும் புரியவுமில்லை
ஒருவர் பின் ஒருவராய் ஆலொசனை
ஒரு தலைகாதலென்பதால்
ஒரேயடியாய் மறந்திடு என்று
ஒழுக்கு வீட்டிலிருக்கலாம்
ஒய்ரரமாய் அவள் இருக்கும்-என்
ஒரத்தில் அல்ல...
ஒருநாள் எனக்காக விடியும்
ஒருநாள் அவள் என்னிடம் வருவாள்
ஒருத்தியில் நினனைப்பிலே
ஓய்யராமாக போகட்டும் காலம்
ஒதுங்கியிருக்கிறேன்..-அவள்
ஒருத்திக்காக......-ஆனால்
ஒரு போதும் மறவேன் அவளை......

ஐயமே வாழ்வாகியதால்...

ஐயமின்றி என்மனதில் காதல்
ஐம்புலனடக்கும் அநிவிருந்தும்
ஐயோ நுழைந்து விட்டேன்
ஐய்யோ இது தான் காதலா?
ஐயமின்றி காத்திருக்கிறேன்
ஐந்து கரத்தினை நம்பியிருக்கிறேன்
ஐந்தல்ல ஐயாயிரம் ஆண்டுகள்
ஐயமின்றி காத்திருப்பேன்
ஐயமிட்டு உனக்காய்
ஐந்து வேளை கடவுளை வணங்கி
ஐந்து பதிகம் பாடுகின்றேன்
ஐந்தறிவு ஜீவனுக்கும்
ஐங்கரம் தம்பிக்கும்
ஐந்து கண்ட அரசனுக்கும்
ஐயத்துடன் வாழும் எதிரிக்கும்
ஐயோ காதல் காதல்...
ஐந்து கண்டங்கள் தாண்டி
ஐந்தாறு படிப்பு படிக்க
ஐயா அனுப்பி வைக்க
ஐயோ எனக்குள் காதல்..
ஐயமோ உனக்கு சொல்ல
ஐயத்துடன் வாழ்கிறேன்
ஐயமே வாழ்வாகியதால்...

குறிப்பு: ஐயம் என்பது பல தடவை கவிதையில் இருக்கிறது. அது வசனங்களுக்கு ஏற்ப பொருள்
தரும்
ஐயமின்றி காத்திருப்பேன் -இதில் வரும் ஐயம் சந்தேகம்
ஐயமிட்டு உனக்காய் - இதில் வரும் ஐயம்- தானம் அல்லது பிச்சை
ஐயமோ உனக்கு சொல்ல -இதில வரும் ஐயம் பயம் அல்லது அச்சம்

ஏற்றுடுவேன் உனக்காக...

ஏக்கம் ஏமாற்றம்
ஏனடி இவை எனை
ஏளனாய் சூழ்கிறது
ஏக்கத்தை தந்து விட்டு
ஏமாற்றத்தையும்
ஏன் தந்தாய்
ஏது மற்ற என் உள்ளமதில்
ஏன் காதலை விதைத்தாய்
ஏழுகடல்களை தாண்டீ
ஏதோ வந்து விட்டேன்
ஏதோதோ காரணத்தால்
ஏன் எனக்குள் நீ புகுந்தாய்?
ஏளனமாய் நான் நினைத்த
ஏற்றமில்ல காதலை
ஏன் என் நெஞ்சுக்குள் புதைத்தாய்
ஏதுமற்ற தன்மையினால்
ஏதுமற்றவனாய் நான்
ஏங்கி தவிக்கிறேன்
ஏன் அதை ரசிக்கிறாய்
ஏன் எனை வெறுக்கிறாய்
ஏராளாம் வினாக்கள்
ஏனிப்படி
ஏமாற்றுகின்றாய்...
ஏதோதோ நினைவுகள்
ஏராளம் ஆசைகள் நெஞ்சில்
ஏக்கம் மட்டும் நிஜுத்தினில்
ஏன் இப்படியேனையாக்கினாய்?
ஏன் என்று பதில் சொல்ல
ஏனடி சுணக்கம் இங்கே நான்
ஏங்கிச் சாவதில் உனக்கு
ஏன்னடி ஆனந்தம்...-காதலில்
ஏழ்மையானவனா?
ஏதும் காரணம் உண்டா?
ஏதெனிலும்
ஏமாற்றாமல் சொல்லிடு
ஏற்றுடுவேன் உனக்காக...

காத்திருக்கிறேன் உனக்காக...

என்னவளே
எதற்க்கித்தனை அமைதி
எப்படி எனை நீ மறந்தாய்
எனக்கு புரியவில்லை
எப்படியும்
எனக்குரியவள் என்றே
என்னாளும் எண்ணுகின்றொன்
எண்ணத்தில் தீயிட்டு
எரித்திடதே-
எரிந்து சாம்பலானாலும்
எப்போதும் உனை மறவேன்
எப்படியோ எய்து விட்டாய் -காதல்
எனும் அம்புதனை
என் நெஞ்சினுள்..
என்ன செய்யுதும்
எடுக்க முடியாதடி
என் உள்ளத்திலிருந்து
எனக்கு அம்பு தைத்தது வலியல்ல -அதை
எய்த நீயோ எடுக்க நினைப்பது
என்னால் தாங்க முடியவில்லை
என் கண்காளுக்கு தூக்கமில்லை
என்னாளும் காவல் செய்கின்றது
என்னவளிடமிருந்து
எகிறி வந்த கதல் அம்புதனை
எப்படியும் என்னை நீ
என்றோ ஒரு நாள் புரிந்து கொள்வாய்
எனும் நம்பிக்கை தனில்..
என்றும் காத்திருக்கிறேன் உனக்காக...

Saturday, November 12, 2005

உறுதியுடன் இருப்பேன்.....

உடல் விட்டு
உயிர் பிரிந்தாலும்
உனைவிட்டு பிரிய இந்த
உலகில் முடியவில்லை
உரிமையாய் பேசியவள்
உண்மையாய் நேசித்தவள்
உறக்கத்திலும்
உன் நினைவு தனை என்
உணர்வாய் தந்தவள்
உள்ளுணர்வு பொய் சொல்ல
உன்னையில்லை
உனக்காகவில்லை- என்று
உலகறிய உரைக்கிறாள்
உண்மையை சொல்லிடு
உயிர் மீது ஏன்
உனக்கு விளையாட்டு
உந்தன் மீத நான்
உணர்ந்தது தான் காதல்
உணர்வுகளின் உரசல்தான்
உண்மைக்காதல் என்று புரிந்தது
உனக்காக மட்டுமே
உன்னோடு மட்டுமே
உதசீனம் செய்கிறேன்
உரிமையுள்ளவர்களை
உதறித்தள்ள இது
உருவாக்கிய காதல் அல்ல
உன்னிடத்தில் எனக்கு
உருவான காதல்
உனக்காக என்
உயிர் உள்ளவரை
உறுதியுடன் இருப்பேன்...

ஈவிரக்கமற்ற உன்னால்...

ஈட்டியின் கூர்மையோ காதல்
ஈற்றிலே இன்று
ஈடாடுகின்றேன் இதன் வலியால்
ஈடாடுவதையே வெறுப்பவன்
ஈரமான விழியுடன்
ஈவிரக்கமற்ற உன் நினைவால்
ஈருடலுக்குள் ஓருயிர் வைக்க
ஈரேழு ஜென்மங்கள் வாழ
ஈரவிழியுடன் தவிக்கிறேன்
ஈயாத உன் உள்ளமுடன் -இதயத்தில்
ஈட்டி எறிந்தவளே!- உனை
ஈர்க்க தெரியமால் -என்
ஈர உணர்வுகள்
ஈடாடுகின்றதடி
ஈகம் செய்ய இது ஒன்றும்
ஈ காக்க காதலல்ல
ஈருலகமெங்கும் இருக்கும்
ஈ (இ) தயக்காதல்
ஈர்க்கும் சக்தியன்றி
ஈரமான கன்னங்களுடன்
ஈழத்தமிழன் நான்
ஈவிரக்கமற்ற உன்னால்...

இருக்கிறேன் உனக்காக இவ்வுலகில்...

இவள் முகம் பார்த்தால்
இவனுக்குள் காதல்
இல்லையேன்று மறுத்திட
இதயமில்லை என்னிடம்
இனியவளின் வார்த்தை
இதமாய் தானிருக்கும்
இடிகள் விழும் காலமும்
இனியாய் தானிக்கும்
இது என் காதலின் ஆரம்பம்
இவள் முடிவின் இறுதியாகுமோ?
இமை மூடி திறந்தால் -என்
அமைகளை தாண்டி நீர் சொறியும்
இசையதை கேட்டால்- அதில்
இனிமையின்றி இருக்கும்
இப்படியேன் ஆகிவிட்டேன்
இறைவனிடம் கேட்டேன்
இன்று வரை பதில்லை -அருகில்
இருப்பவரிடம் கேட்டேன்
இது என்ன கேள்வி என்றார்
இப்படியேன்னை சாகவிட
இனியவளே நான் என் செய்தேன்
இதயமதை கேட்டதற்க்கு
இறக்கும் வரம் தருவதா?
இதிலுனக்கென்ன ஆனந்தம்
இன்றும் நம்புகின்றேன்
இறுதிவரை பார்க்கமாட்டேன்
இன்னோருவள் முகமதை
இருக்கிறேன் உனக்காக
இவ்வுலகில்.......

ஆழ்கிணற்றில் ஆயுளைமுடிக்கிறது...

ஆயிரம் ஆயிரம்
ஆசைகள் நெஞ்சிலே
ஆகாயமும் பூமியும்
ஆண்டவன் நிழலும்
ஆதரவுக்கில்லையேனக்கு
ஆற்றிலே இறங்கிவிட்டேன்
ஆறறிவிருந்தும்
ஆழ நான் சிந்திக்கவில்லை
ஆதலினால்..
ஆழியில் அகப்பட்ட துரும்பானேன்
ஆசையாய் நானும் -என்
ஆருயிராய் நினைத்தவள்
ஆக்கிவிட்டாள் இப்பிடியேன்னை
ஆகா பாவமென்று
ஆறுதல் சொல்ல பலருளர்
ஆனாலும்....
ஆதரவுக்கில்லையேவனும்
ஆழக்கடலே
ஆரத்தழுவும் அலையே
ஆண்டுகள் பல நெஞ்சில்
ஆசையை சுமந்து விட்டேன்
ஆதமும் ஏவாலும்
ஆரம்பித்த காதலாம் -ஆனால்
ஆண்டவன் எனக்கு
ஆசிர்வாதம் தரவில்லை
ஆருயிர் நண்பனும்
ஆலோசனை தரவில்லை
ஆசைகள் அலைபட்ட
ஆழக்கடல் கரைமணலென
ஆழக்கிணற்றில்..
ஆயுளை முடிக்கிறது....

அடங்கிடுவேன் கல்லறைக்குள்...

அன்புடனே அரவனைக்கும்
அன்னையிடம் கூட -நான்
அதிகம் அதிகம் வைத்தேன்
அன்புதனை உன்னிடத்தில்
அழியாது நேசமென்று
அசைக்க முயொத உறுதியினால்
அறிவிலியாய் நானிங்கே
அலைகின்றேன் காதலினால்
அகிலத்தில்
அன்பு வைத்தவன் நிலையிதா?
அறியாமல் நுழைந்தது
அன்பு கொண்ட என் தவறா?
அழகான வாழ்க்கை வாழ
அழைத்தேன் காதலை -இன்று
அது தவறெனில்
அதையேன் பூமியில் படைத்தான்
அயலவரும் உதவவில்லை
அன்பு கொண்டவரும் ஆதரவில்லை
அனுமதியும் இல்லையவள்

அகத்தினில் -தினமும்
அழுகின்றேன் அழுகின்றேன்-அவள'
அடிமையாய் போன -என்
அகத்தின் வேதனையை யார் அறிவார்
அறிந்தாலும் அக்கறைப்பட யாரளர்?
அனல் பட்ட புளுவாய்
அழிகின்றேன்...
அதிசயமாய் என் காதல்
அரங்கேறிவிட்டால்
அப்படியே நானும்
அடிங்கிடுவேன அவள் அன்புக்கு
அல்லது அறுத்திடும் காதலெனில்
அடங்கிடுவேன் கல்லறைக்குள்
அன்புக்காய் ஏங்கியே!...

Thursday, November 03, 2005

I Love You

I hate this world
Because of one person
I hate every one
Because of one person
I hate to eat
Because of one person
I hate to study
Because of one person
I hate to sleep
Because of one person
I hate to Dreaming
Because of one person
I hate to talk with others
Because of one person
I hate every thing
Because of one person
I never hate you
Because I Love you

Monday, August 01, 2005

காத்திருப்புக்கள் தொடரும்!......

பெண்னே!
நீயும் மானிடப்பிறப்பு தானே!?
மனங்களை...
மனதார உணரதெரியாத நீ..
எப்படி மனிதப்பபிறப்புக்குள்
அடங்கினாய்?
அன்பாய் பழகுவதையும்
ஆசையாய் பார்ப்பதையும்
அர்தமின்றி.....
நான் செய்வதாய் எண்ணுகிறாயோ?
அர்தங்கள் புரிந்தாலும்...-அதை
நீ அலட்சியம் செய்வது -என்
நெஞ்சுக்கு புரிகிறது?
எதற்காக இந்த அலட்சியம்
எதற்காக இந்த வஞ்சனை... உன்னை நினைத்து... கவிதையேழுதினேன்....
உன் நினைவினில்...
உயிர் வாழ்ந்தேன்...
இதை தவிர நான்..
என் செய்தேன் உனக்கு?
இவை தான் குற்ற மெனில்...
தண்டனையை...
ஆயுள் முழுவதும்...-நான்
அழுதுகொண்டிருக்கும் படி
தருவதா? -இன்னும்
காலம் போகவில்லை
கண்னே!...
காதலையுன்னிடம் -நான்
சொல்லவில்லை.....
கவிதையை உன்னிடம்-நான்
காட்டவில்லை.....ஆனாலும்
உணர்தத் முற்ப்பட்டேன் -என்
காதலை......-எதை
சொன்னாலும் சிரித்து கொண்டிருப்பாய்...-
இதற்க்கும் சிரித்து...-என்
வாழ்க்கையை
சின்னாபின்னமாக்கிடாதே!
சிந்தனை மாறி...
சிதறிக்கிடந்த என் சீரற்ற வாழ்வுக்கு....
மீள் உயிர் கொடுத்தது -நான்
உன் மேல் கொண்ட காதல்...
உலகத்தில் காதல் எனும்
உணர்வின் உன்னதத்தை-எனக்கு
உணரவைத்தவளும் நீயே!
உணர்வாலே..-நீ
என்னுயிராகிவிட்டாய்
எனக்கு தெரியாமலே.....
என்னிதயத்தில் நுழைந்தும் விட்டாய்....
நுனுக்கமான உன்
இதயத்தை படிப்பது
கடினமானதாகியதால்....
காதலை நானும்...-உன்னிடம்
காட்டிக் கொள்ளவில்லை....-இப்போ
காதல் பொய்யாகுமோ!?
கனவுகள்...கனவுகளாகுமோ!?
கண்ணீர் தான் என் வாழ்வாகுமோ?
எத்தனை அச்சம் என் மனதில்...
இத்தனைக்கும் காரணம் நீ...!?
ஏனிப்படி செய்கிறாய்? - என்
நித்திரையற்ற இரவுகளில்- உன்
நினைவுகள் தான் எச்சங்களாய்...
நினைத்து நினைத்து
நிதம் என்னை வாட்டுகிறேன்...-நீ
வருவாய் என் காதலியாய்
என்று எண்ணுவதால்.....-என்
சோகமான வாழ்வுக்குள்
ஒரு சந்தோச ஒளிதந்த நீ- மீண்டும்
இருள்சூழ்ந்த அந்த குகைக்குள் -ஏன்
தள்ளிவிட நினைக்கிறாய்? -உனை
இழந்த வாழ்வெனக்கு வாழ்வாகாது
உனைப்பிரிந்தால் உயிர் கூட -என்
உடலிருக்க அச்சப்படும்-உறுதி
மட்டும் நெஞ்சில் கொண்டு
இதயத்தில் உன்னை கொண்டு
இயங்குகிறேன் மனிதனாய்...!?
என் இதயத்து ஜீவனே!
ஒரு முறை செல்லிடு -நீ
என்னை காதலிப்பதாய்....
சினிமா என்ற சித்திரத்தை போல்
சிரிப்பதற்காய் கவி எழுதவில்லை
சிந்திப்பாய் நீயேன... -நான்
சிந்திப்பதால் எழுதுகிறேன்.........
சிநேகிதியே!...
சிற்பமாய் நீயும்
அமைதி கொள்ளாதே!....-உன்
அமைதியை நேசிக்கும் -என்
கேள்விக்கு பதிலையும்..
மெளனத்தால் தந்திடாதே!?
மரத்துப் போயிருந்த
என் மனதில் காதலெனும்
கனியை தந்தவளே!
கனவுகளுடன்.....
உன் நினைவுகளுடன்
காலம் போகுது காதல்
கவிதையை நான் எழுதியது
உனை கண்ட பின் தான்....-இது
உனக்காக நான் சொல்லும்
பொய்யல்ல உண்மை......
உருளும் உலகில்
மீண்டும் சந்திப்போம் என்று...
நழுவிடாதே!...-நான்
சந்திப்புக்களை எதிர் பார்க்கவில்லை
என்னுடன் நீ
வாழ வேண்டுமென விரும்புகிறேன்....!
உன் வாய்கள் சொல்லும்
வார்த்தைகள்-என்
வாழ்க்கையின் முடிவுகள்...
சத்தியமாய் இந்த வார்த்தை -என்
கற்பனையில் உதிக்கவில்லை
கண்மணியாள்
உன் நினைவுதனில்- இன்றும்
ஒரு நித்திரையற்ற இரவில்
நிஜமாக எழுந்த வரிகள்....
காத்திரமாய் சொல்லிய -என்
உள்ளத்து உணர்வுகளுடன் -என்
காத்திருப்புக்கள் தொடரும்
உனக்காக....

Wednesday, July 06, 2005

யார் அறிவார்....?

எனக்குரியவளாய்
எனக்குத் தெரிபவளே!
ஏன்.......
ஏமாற்றங்களை மட்டும்
எனதாக்குகிறாய்
எப்போதும்
உன்நினைவில் தான்
என்னிதயம் இயங்குகிறது
ஏக்கங்களும்
ஏமாற்றங்களும்
என் சொத்தாகி விட்டது
ஏனிப்படி
எனக்குமட்டும் .....-என்
சுவாசக்காற்று தினம்
உன் பெயரை சொல்லியே
என்னிதயத்தை தழுவுகிறது
எங்கும் எதிலும்
உன்நினைவு.........-என்
ஞாபகசக்தியை கூட
குறைக்கிறது.......
என்ன நடந்தது எனக்கு?
இது உன்னால் வந்தது
உன் மேல் நான் கொண்ட
காதலால் வந்தது
காத்திருப்பு தான் காதலுக்கு
இனிமையேன்றார்
காத்திருப்பே!-என்
வாழ்வாகிடுமா?
ஏக்கங்கங்கள்....
ஏமாற்றங்கள்....
தவிப்புக்கள்...
இவற்றுடன் இப்போ!
மெல்ல மெல்ல என்னுள்
அச்சத்தின் அடையாளமும்
தெரிகிறது - அதனால்
எழும் சோகத்தால்
வரும் என் அழுகையை....
யார் அறிவார்....?

Monday, July 04, 2005

சொல்லியதா?

பல நாட்கள் காதிருந்தேன்!
களவாடாலாம் என
திருடினேன் உன்
இதயத்தை.....
ஆனால் நல்ல நண்பியாய்!
அமைதியாகியது மனம்
ஆறுதலடைந்தது உள்ளம்
மறுபடியும் மறுபடியும்
என் உள்ளம் எனக்குள்
ஏதோ சொல்லியது!
என்ன உற்றுக் கேட்டேன்!
நீ என் நண்பி மட்டுமே என்றது
அமைதியான
மனமிங்குஆர்பரிக்கிறது....
அங்கலாய்க்கிறது....
பள்ளியில் நண்பியான நீ
வாழ்க்கையில்....
நல்லநண்பியாக - என்
வாழ்க்கை துணைவியாக
வரும் நாளை எண்ணி.!
எப்போது அந்நத காலம்
என்னை சேரும்!
என்னுள்ளம் சொல்லியது
உனக்கு அவள் தான் -ஆனால்
உன் உள்ளம்
உனக்கு நான் என சொல்லியதா?

நிலையாய் வரும் கவிதைகள்!

உன் அமைதியில்.....
என்னுள்ளம் சாகிறது...
இத்தோடு நிறுத்தி விடு
என் மனதுக்குள் தினந்தோறும்
எத்தனை போராட்டம்!
நினைவுதான் என்
நிஜ வாழ்வாகுமா?-இல்லை
நீ எந்தன் வாழ்வில்
ஓளியாகுவாயா?
புரியவில்லை...
எதுவுமே புரியவில்லை
கதிரைகளுக்கும்..
மேசைகளுக்கும்..
நடக்கும் சக்கிதியிருந்தால்...?
என்ன செய்யுமோ!
அதை தான் நான் செய்கிறேன்
காரணம் காதல்....
ஆம்-நான்
உன் மேல் கொண்ட காதல்
நிசப்பதமான இரவுகளில்
நித்திரையற்ற வேளையில்
நினைவுகள் உன் பக்கம்
நிறுத்த முடியாத
உன் நினைவுடனே!
நிலையாய் வரும்
கவிதைகள்......!